Skip to content

எதற்காக இந்த முயற்சி?

உங்கள் திரையின் அளவை 1024×768 அல்லது அதற்கு மேல் நிறுவி இருந்தால், இந்த தளத்தை சிறப்பாக பார்க்கமுடியும். (ஜாவாஸ்கிரிப்ட் இயக்கத்தில் இருக்கவேண்டும்)

இன்னும் பத்து வருடங்களில் பணி ஓய்வு பெறப்போகும் நான், இப்போதிலிருந்தே அதற்கு என்னை ஆயத்தம் செய்து கொள்ளவேண்டும் என்று, என்ன செய்யலாம் என்று ஆறு மாதமாக யோசித்து வந்தேன். எனக்கு தெரிந்தது எல்லாம், கணணி பற்றியதுதான். கடந்த பத்து வருடங்களாக தமிழில் கணணியை  உபயோகித்து வருவது பற்றி ஓரளவுக்கு எனக்கு தெரியும். அது எந்த அளவு முன்னேறி உள்ளது என்று, கூகுளில் பல வகையில் தேடிப்பார்த்தேன்.

எனக்கு கிடைத்தது எல்லாம், எம் பி 3 பாடல்கள், சினிமா படங்கள் தளவிறக்கம் செய்யும் தளம், பலரின் கவிதைகள், பல நிர்வாகம் செய்யப்படாத சொந்த கருத்துக்களை உடைய வலைப்பூ தளம், தமிழும் ஆங்கிலமும் கலந்த பல தளம், இன்னும் பழைய முறையில் எழுத்துரு கோப்புகளை தளவிறக்கம் செய்யாமல் சரியாக பார்க்க முடியாத பல தளம், கசமுசா என விளம்பரங்கள் கொண்ட பல தளம், என எதுவுமே என்னை ஈர்க்கவில்லை. குறிப்பிட்டு சொல்லும்படி பத்து, இருபது தளங்கள்தான் கிடைத்தது. அதை பிரித்து தொகுத்து இந்த தளத்தில் “தமிழ் தளங்கள்” தலைப்பின்கீழ் கொடுத்துள்ளேன்.

உங்களுக்கு எதாவது தெரிந்தால், தயவுசெய்து எனக்கு தெரிவிக்கவும்.  அதையும் இங்கு சேர்த்துக்கொள்ளப்படும்.

அறிவியல், தொழில்நுட்பம், வியாபாரம், விஞ்ஞானம், சமூகவியல், சரித்திரம், இரசாயணம், நிர்வாகம், ஆரோக்கியம், இலக்கியம், பொறியியல், சமையல், கல்வி, இசை, நாடகம், சிறுகதை, காவியம், மருத்துவம், தொழில்நுட்பம், விவசாயம்  என்று இன்னும் எத்தனையோ துறைகளில் பலரும் அறிய பல விஷயங்கள் இருக்கும்போது, வெறும் திரைப்பட பாடல்கள் மற்றும் திரைப்படம் தளவிறக்கம் செய்வது என்பதற்கு மட்டும்தான், இணையதளம் உபயோகமானதா? தமிழர்களின் மனம் வெறும் கேளிக்கை மற்றும் பொழுதுபோக்கு அம்சங்களை விட்டு வேறு எதையும் இணையதளத்தில் தேடாதா? இப்படியே போனால், வரும் சந்ததியினர் இணையதளத்தில் தமிழில் எப்படி பல விஷயங்களை தேடிப்பெருவது? பலரும் இப்படி சிந்தித்து பல துறைகளில் அறிவுசார்ந்த பதிப்புகளை இணையதளத்திற்கு ஏற்றினால்தானே யாரவது ஒருவர் வேண்டிய பொழுதில், அதைத்தேடி படித்து பயன்பெறலாம்! இதற்கு நான் எப்படி உதவியாக இருக்கமுடியும்? என பல கேள்விகள் எழுந்தது. இதன் விளைவே இந்த தளம்.

என்னைப்பற்றி “தள நிர்வாகி” தலைப்பின்கீழ் அறிந்துகொள்ளலாம்.

இந்த தளத்தில் உள்ள அனைத்து கட்டுரைகளின் விவரம், “தொகுப்புகள்” தொடரின் கீழ் உள்ளது.