ஒரு இணையதளத்திற்கு நாம் செல்லும்போது முதன்முதலில் நாம் பார்க்கும் பக்கத்தை இன்டெக்ஸ் பேஜ் அல்லது ஹோம் பேஜ் என்று சொல்கிறோம். இதை தமிழில் பரவலாக, “முகப்பு” என்று சொல்லப்படுகிறது. எப்படி ஒரு டெக்ஸ்ட் ஃபையிலில் பொதுவாக டாட் டிஎக்ஸ்டி (.txt) என்று ஒரு எக்ஸ்டென்ஷன் இருக்குமோ அதேபோல, ஒரு வெப் பேஜ் (இதுவும் ஒரு ஃபையில்தான்) டாட் ஹெச்டிஎம் அல்லது ஹெச்டிஎம்எல் என்ற எக்ஸ்டென்ஷனை கொண்டிருக்கும். இதுபோன்ற வெப் பேஜஸ் வெப் ப்ரௌசெர் அதாவது இணைய உலாவியில் திறக்கப்படும். இந்த இணைய உலாவி, இன்டர்நெட் எக்ஸ்ப்ளோரர், ஃபயர்பாக்ஸ், மொசில்லா, நெட்ஸ்கேப், ஒபேரா என்று எதுவாகவும் இருக்கலாம்.
டாட் ஹெச்டிஎம் அல்லது ஹெச்டிஎம்எல் என்ற எக்ஸ்டென்ஷனை கொண்டிருக்கும் ஃபையிலை ஸ்டேடிக் பேஜ் என்றும், டாட் பிஹெச்பி, டாட் ஏஎஸ்பி, டாட் பிஎல், டாட் சிஜிஐ, என பல்வேறு விதமான ஃபையிலை டைனமிக் பேஜ் என்றும் சொல்கிறோம். ஒரு இணையதளத்தின் இன்டெக்ஸ் பேஜ், ஸ்டேடிக் பேஜ் அல்லது டைனமிக் பேஜ் என்று எதுவாக வேண்டுமானாலும் இருக்கலாம். இதை வெப் சர்வர் மென்பொருளில் நம் விருப்பத்திற்கு தகுந்தவாறு நிறுவிக்கொள்ளலாம்.
ஸ்டேடிக் பேஜ் என்பது வெறும் ஹெச்டிஎம்எல் குறிகளால் உருவாக்கப்பட்ட ஒரு கோப்பு. இது நிலையானது (இந்த பக்கத்தை தயாரித்தவர் அதை மாற்றி அமைக்காத வரை). உலகத்தில் உள்ள அனைவரும் இந்தமாதிரியான ஒரு கோப்பை இணையத்தில் இருந்து பெறும்போது, இணைய உலவியால் ஒரேமாதிரியான விதத்தில் எல்லோராலும் பார்க்கப்படும். ஆனால், டைனமிக் பேஜ் ஹெச்டிஎம்எல் மற்றும் ஸ்க்ரிப்டிங் லேங்குவேஜ் குறிகளால் உருவாக்கப்பட்ட ஒரு கோப்பு. இது நிலையானதல்ல. உலகத்தில் உள்ள அனைவரும் இதை ஒரேமாதிரியாக பார்பதில்லை. உதாரணமாக, கூகுளில் தேடும்போது, உங்கள் மெயில் பாக்ஸில் மெயில் செக் செய்யும்போது, ஸ்டாக் மார்க்கெட் தளத்தை பார்க்கும்போது, என பல்வேறு தளங்களில், எல்லோராலும் ஒரேநேரத்தில் ஒருமாதிரியாக அதே பக்கம் பார்க்கப்படுவதில்லை.
இணைய உலவிகள், இயல்பாக பலவிதமான கோப்புகளை, அதாவது டெக்ஸ்ட், பிக்சர், சவுண்ட், விடியோ, ஹெச்டிஎம், ஹெச்டிஎம்எல் என்ற மாதிரியான கோப்புகளை காட்டும் திறன் படைத்தது. இது எவ்வாறு சாத்தியமாகிறது என்றால், எம்ஐஎம்இ (மல்டிபர்பஸ் இன்டர்நெட் மெயில் எக்ஸ்டென்ஷன்) டைப் எனப்படும் குறியீடு மூலம்தான். ஒரு வெப் பேஜ் நமது கணணியில் உள்ள உலாவி கைக்கு கிடைக்கும்போது, இந்த குறியீடுகளை கண்டறிந்து, அதை காட்டமுடிகிறது. இதனால், டெக்ஸ்ட், பிக்சர், சவுண்ட், விடியோ போன்ற ஃபையில்களையும் இணைய உலாவியில் பார்க்கமுடியும். அப்படி இணைய உலவியால் காட்டமுடியாத ஒரு ஃபையில் இருந்தால் (அல்லது இணையதொடரில் வந்தால்), உடனே ப்ரௌசெர் என்ன செய்வது என்று அறியாமல், நமக்கு இந்த கோப்பை சேமிக்கவேண்டுமா என்று ஒரு “சேவ் டயலாக் பாக்ஸ்” சாளரத்தை காட்டுகிறது.
இணையதளத்தில் இருந்து நம் கணணிக்கு வரும் அணைத்து கோப்புகளும், வெப் சர்வர் வழியாகவே வழங்கப்படும். பொதுவாக இது ஸ்டேடிக் பேஜ்களுக்கு பொருந்தும். ஆனால், ஒரு டைனமிக் பேஜ் என்பது ஸ்கிரிப்ட் என்ஜின் எனப்படும் மென்பொருள் மூலம், வெப் சர்வர் வழியாக நம் கணணிக்கு வரும். இந்த டைனமிக் பேஜ் என்பது, ஹெச்டிஎம்எல் மற்றும் ஸ்க்ரிப்டிங் லேங்குவேஜ் குறிகளால் ஒரு கோப்பாக செர்வரில் சேமிக்கப்படும். நாம் இந்த மாதிரியான டைனமிக் பேஜ் ஒன்றை சொடுக்கி வேண்டும்போது, வெப் சர்வர் இந்த டைனமிக் கோப்பை, முதலில் எந்த ஸ்க்ரிப்டிங் என்ஜினுக்கு அனுப்பவேண்டும் என்று, அந்த கோப்பின் எக்ஸ்டென்ஷன் மூலம் கண்டறிந்து, அனுப்பி, அந்த என்ஜினில் இருந்து வரும் ஹெச்டிஎம்எல் கோப்பை நம் இணைய உலாவிக்கு கொடுக்கும். எனவே இவ்வாறாக கடைசியில் நம் இணைய உலாவிக்கு வரும் கோப்பு ஒரு ஹெச்டிஎம்எல் குறிகளை மட்டும் உள்ளடக்கியதாக இருக்கும். ஏனெனில், இணைய உலவியால், ஒரு டைனமிக் பக்கத்தை காட்டமுடியாது.
டைனமிக் பக்கங்களை உருவாக்க, ஸ்க்ரிப்டிங் லேங்குவேஜ் தெரிந்துகொள்ள வேண்டும். பொதுவாக, தரவுதள மென்பொருளும் வேண்டும். ஏனென்றால், டைனமிக் பக்கங்கள் ஒரு தரவுத்தளத்தில் உள்ள தரவுகளை நாம் கொடுக்கும் இன்புட் மேட்டருக்கு தகுந்தவாறு விசாரித்து அவுட்புட் செய்கிறது. ஒரு வெப் சர்வர் மென்பொருளும் அவசியம்.
நீங்கள் படித்துக்கொண்டு இருக்கும் பகுதி:- இணையம் ஒரு அறிமுகம் (இந்த பகுப்பில் உள்ள மற்றைய கட்டுரைகளுக்கு கீழேயுள்ள தொடரை சொடக்குக)
- ஒருங்குறியில் தமிழ் இணையதளம் அமைப்பது எதற்காக?
- ஒரு இணையதளம் அமைப்பது எப்படி? - பகுதி 1
- ஒரு இணையதளம் அமைப்பது எப்படி? – பகுதி 2
- வலைப்பதிவு மற்றும் இணையதளம் - இவற்றில் உள்ள வித்தியாசம் என்ன?
- இணையதளம் அமைக்க என்னென்ன ஆற்றல்கள் வேண்டும்?
- சொந்த தளப்பெயர் பதிவு செய்வது எப்படி?
- இணையதளம் நிறுவ வேண்டிய மென்பொருள் வன்பொருள் என்னென்ன?
- தளநிர்வாகம் சுலபமாக செய்வது எப்படி?
- ஸ்டேடிக் மற்றும் டைனமிக் பக்கங்கள் என்றால் என்ன?
- லினிக்ஸ் சர்வர் அமைப்பது எப்படி? பகுதி 1
- லினிக்ஸ் சர்வர் அமைப்பது எப்படி? பகுதி 2
One Comment
Good
Post a Comment