Skip to content

தளநிர்வாகம் சுலபமாக செய்வது எப்படி?

பாரம்பரிய முறையில், அதாவது, ஹெச்டிஎம்எல், சிஎஸ்எஸ், மெனு, படிவங்கள் (forms),  என எல்லாமே நாமே எழுதி உருவாக்கி ஒரு தளம் அமைத்தால், அதை நிர்வகிப்பதில் பல சிக்கல்கள் உள்ளது. இதை ஒரு முழு நேர வேலையாக செய்யவேண்டும். இதனால், தள உள்ளடக்கம் பற்றிய சிந்தனைகளைவிட தள நிர்வாக வேலைகளே ஒரு பளுவாகிவிடும். இதை நிவர்த்தி செய்ய, தள நிர்வாக மென்பொருட்கள் (கண்டன்ட் மேனஜ்மென்ட் சிஸ்டம்) உள்ளது. இதைப்பற்றி விபரமாக அறிந்துகொள்ளவோம்.

ஒரு தரமான தளத்தில் பல அம்சங்கள் இருக்கவேண்டும்.

  • தளத்தில் உள்ள எல்லா பக்கங்களும் ஒருப்போல அழகுபடுத்தி இருக்கவேண்டும். (முக்கியமாக தீம், டெம்ப்ளேட் மற்றும் சிஎஸ்எஸ் உதவியில்)
  • பயனர்கள் பதிவு செய்யும் வசதி இருக்கவேண்டும் (டேட்டாபேஸ் உதவியில்)
  • பதிவு செய்தவர்கள் மட்டும் பார்க்கும் பகுதி இருக்கவேண்டும் (ஸ்க்ரிப்ட் உதவியில் – டைனமிக் பக்கங்கள்)
  • மெனு இருக்கவேண்டும் (ஜாவாஸ்கிரிப்ட், எக்ஸ்ஹெச்டிஎம்எல் உதவியில்)
  • தளத்தில் பலவிதமான (வேண்டிய) இடங்களில் உள்ளடக்கத்தை காட்டும் வசதி இருக்கவேண்டும் (கண்டன்ட் பொசிஷநிங்)
  • தொடர்புக்கான பக்கங்கள் இருக்கவேண்டும்
  • வாக்கெடுப்பு வசதி இருக்கவேண்டும்
  • விளம்பரம் செய்ய மற்றும் நிர்வாகம் செய்ய வசதி இருக்கவேண்டும்
  • விருந்தினர் பக்கம் அல்லது கருத்துபெட்டி (கஸ்ட் புக் அல்லது சஜஷன் பாக்ஸ்) இருக்கவேண்டும்
  • செய்திமடல் (நியூஸ்லெட்டர்) வசதி இருக்கவேண்டும்

இப்படியாக ஒரு நல்ல தளத்துக்கு பல்வேறு அடிப்படை குணாதிசயங்கள் இருக்கவேண்டும். இவை அனைத்தையும் ஒருவரோ அல்லது ஒரு குழுவோ செய்வதென்பது மிகவும் சிரமமான விஷயம். இதை எளிதில் செய்யவே தள நிர்வாக மென்பொருள் மிகவும் அவசியம். தள நிர்வாக மென்பொருள் மூலம் ஒரு தளத்தை நிர்வகிப்பதில் பல நன்மைகள் உள்ளது. மிகவும் முக்கியமானது, எளிய நிர்வாகம் – தரமான உள்ளடக்கம்! அதாவது, தள உள்ளடக்கத்தில் அதிக கவனமும் நேரமும் செலவழித்து, சிறப்பான தளம் அமைப்பது மற்றும் குறைந்த நேரத்தில் எளிதாக தள நிர்வாகம் செய்வது என்பது சாத்தியமாகும். கூகுளில் “பெஸ்ட் சிஎம்எஸ்” என்று தேடிப்பாருங்கள்! பல விடைகள் கிடைக்கும்.

மிகவும் பிரபலமான மூன்று இலவச தள நிர்வாக மென்பொருட்கள்: மேம்போ, ஜூம்லா மற்றும் த்ருபால்

ஒன்றுக்கொன்று எது நல்லது கெட்டது என ஆராயாமல், பொதுவாக தள நிர்வாக மென்பொருட்களில் என்னென குணாதிசயங்களை வைத்து தேர்ந்தெடுக்கவேண்டும் என பார்ப்போம். சிம்பிளா தள நிர்வாக மென்பொருளை தேர்ந்தெடுப்பது எப்படி என்ற கேள்விக்கு ஒப்புக்கொள்ளும்படியான பதில்கள் கீழேயுள்ள படி இருக்கவேண்டும்.

  • ஒரு தள நிர்வாகம் என்பது வெறுமனே கட்டுரைகளை எடிட் செய்வது, அகற்றுவது, என்பது மட்டுமல்லாமல், கட்டுரை தொகுப்புகளை ஒரு அத்தியாதின் கீழ் பகுதி பகுதியாக பிரித்து அடுக்க, தேட, மேலும் அகற்றிய கட்டுரைகளை வேண்டுமென்றால் திரும்பப்பெற என பலவிதத்திலும் ஆர்கனைஸ் செய்யவும் வசதி இருக்கவேண்டும்.
  • தள முகப்பு என்பது ஒரு தளத்தின் முக்கிய அம்சம். இந்த முகப்பு பக்கத்தை நிர்வகிக்கும் தன்மை இருக்கவேண்டும்.
  • ஒரு தளத்தில், எல்லா பகுதிகளும் எல்லா பக்கங்களிலும் காட்டபடுவதில்லை. சில பகுதிகள் எல்லா பக்கங்களிலும் காட்டவேண்டும். இதுபோன்று, ஒரு தளத்தில் இடது, வலது, மேல், கீழ் என வேண்டிய இடங்களில் குறிப்பிட்ட பகுதியை, குறிப்பிட்ட பக்கத்தில் காட்டும் (பொசிஷநிங்) வசதி இருக்கவேண்டும்.
  • பலவிதத்தில் நம் தள உள்ளடக்கத்தை தேடும் வசதி இருக்கவேண்டும்.
  • பொதுவாக தள நிர்வாக மென்பொருளில், ஒரு எழுத்து தொகுப்பான் (டெக்ஸ்ட் எடிட்டர்) இருக்கும். இது வைசிவிக் எடிட்டராக இருக்கும். இது சில லிமிடெட் வசதியுடன் இல்லாமலும், வேண்டுமென்றால் வேறு ஒரு எடிட்டரை பொருத்திக்கொள்ளும் வசதியுடனும் இருக்கவேண்டும்.
  • ஒரு தளம் பிக்சர், ஆடியோ, வீடியோ, பிடிஎப், பிளாஷ், வேர்ட் என பல்வேறு கோப்புகளை கொண்டிருக்கும். இவைகளை பராமரிக்கும் வகையிலும், மற்றும் தளவேற்றம், தளவிறக்கம் செய்யவும் வசதியும் இருக்கவேண்டும். இதை ரிசோர்ஸ் மேனேஜ்மெண்ட் என்பர்.
  • ஒரு பெரிய தளத்தை ஒரு தனிநபர் நிருவகிப்பதில்லை மற்றும் ஒருவரே எல்லா தள உள்ளடக்கத்தையும் உருவாக்குவதில்லை. பல நிலையில் பல்வேறு உரிமைகள் அடிப்படையில், பதிவு செய்த பயனர்கள் சேர்ந்து ஒரு குழுவாக ஒரு தளத்தை நிருவகிக்கும் வசதியும் இருக்கவேண்டும். இதை கொலாபரேட்டட் சைட் மேனேஜ்மெண்ட் என்பர்.
  • தள நிர்வாக மென்பொருள் அடிப்படையில் பல வசதிகளை கொண்டிருந்தாலும், வேண்டிய மாதிரி வசதிகளை நீட்டிக்கொண்டு போக, நீட்சிகள் எனப்படும் ஆட்-ஆண் அல்லது எக்ஸ்டென்ஷன்களை பொருத்திக்கொள்ளும் தன்மையை கொண்டிருக்கவேண்டும்.
  • ஆங்கிலத்தில் மட்டுமல்லாமல் வேறு மொழிகளிலும் தள உள்ளடக்கம் செய்யும், நிருவகிக்கும் தன்மை இருக்கவேண்டும்.

தள நிர்வாக மென்பொருள் தளத்திற்க்கு சென்று, அதிகப்படியான நீட்சிகள் உள்ளனவா, விவரமான உதவி பக்கங்கள் உள்ளனவா, கருத்துமன்றம் அல்லது கருத்துக்களம் (forum) உள்ளனவா, மேலும் நீங்கள் தேர்வு செய்யப்போகும் மென்பொருளை பற்றி இணையத்தில் விமர்சனங்கள் உள்ளனவா, என பலவகையில் ஆராய்ந்து தேர்வு செய்வது நல்லது.

தள நிர்வாக மென்பொருள் அடிப்படையாக எந்த மென்பொருளில் உருவாக்கி இயக்கபடுகிறது என்பதும் அவசியமான, ஆலோசிக்கப்பட வேண்டிய ஒன்று. பொதுவாக எல்லாமே திறமூல உரிமத்தில் வழங்கப்படும் பிஹெச்பி ஸ்க்ரிப்டிங் லேங்குவேஜ் மற்றும் மைஎஸ்க்யுஎல் தரவுதளம் என்ற கூட்டினைப்பிலேயே இருக்கின்றது. ஜோம்லாவும் விதிவிலக்கல்ல.

பல்வேறுபட்ட சப்ஜெக்ட் மேட்டரில் அதாவது, ஹெச்டிஎம்எல், சிஎஸ்எஸ், ஜூம்லா, மைஎஸ்க்யுஎல், பிஹெச்பி, ஜாவாஸ்கிரிப்ட் என்ற விஷயங்களில் தமிழில் இலவசமாக அனைவரும் படித்து பயன்பெறுமாறு புத்தகங்கள் எழுதி கொண்டிருக்கிறேன். அடிக்கடி என்தமிழ்.வலை தளத்திற்குச்சென்று பார்க்கவும்.

நான் ஜூம்லாவை தேர்வு செய்துள்ளேன், மற்றும் ஜூம்லாவில் கடந்த ஐந்து ஆண்டுகளாக ஓரளவிற்கு தேர்ச்சி பெற்றுள்ளேன். ஜோம்லாவில் ஒரு மாதிரி தளமும் நிறுவியுள்ளேன். பிரத்யேக காரணங்கள் ஒன்றுமில்லை. இதில் ஆரம்பித்து, ஸ்திரமாக இதிலேயே இருந்துவிட்டேன். மற்றவைகளுக்கு தாவ குறிப்பிடும்படியான காரணங்கள் இல்லை.

நீங்கள் படித்துக்கொண்டு இருக்கும் பகுதி:- இணையம் ஒரு அறிமுகம் (இந்த பகுப்பில் உள்ள மற்றைய கட்டுரைகளுக்கு கீழேயுள்ள தொடரை சொடக்குக)

இந்த கட்டுரை உங்களுக்கு பயனுள்ளதாக இருந்ததா? இதுபோல வேறு எந்தவிதமான தலைப்பில் கட்டுரைகளை எதிர்பார்கிறீர்கள் என பின்னூட்டம் கொடுக்கவும்.

  • Share/Bookmark

Post a Comment

Your email is never published nor shared. Required fields are marked *
*
*