Skip to content

யாஹூவின் பிலிக்கர் சேவையை எப்படி உபயோகிக்கலாம்?

இந்த படம் நான் யாஹூவின் பிலிக்கர் தளத்தில் நேரத்தை போக்குவதற்கு, வெறுமனே உலாவிவரும்போது, கிடைத்த மிகவும் அழகான, துல்லியமான பூக்களின் படக்கற்று. இந்த படங்கள் நேரடியாக யாகூவின் பிலிக்கர் தளத்திலிருந்து வருகிறது.

நான் இதை காப்பி செய்யவில்லை, அதனால் காப்புரிமையையும் மீறவில்லை. மேலும், எல்லா படங்களை, என் தளத்தில் ஏற்றி அனாவசியமாக சேமிப்பு இடத்தையும் விரயமாக்கவில்லை. இந்த படம் என் தளத்திலிருந்து வரவில்லை என்பதால், என் தளப்போக்குவரத்தும் அவசிமில்லாமல் வீணாக்கப்படவில்லை.

இப்படியாக பல படங்களை நாம் ரசிப்பது, நம் ரசனையை மற்றவருடன் பகிர்ந்துகொள்ளவது மேலும், நம் படங்களின் தொகுப்பை சேமித்துவைத்து வேண்டியபோது மின்னஞ்சல் செய்வது, ஒரு வலைப்பதிவில் அனைவரும் லிங்க் செய்யும்படி செய்வது என பல்வேறு வகையில், யாஹூவின் பிலிக்கர் தளம் உபயோகமுள்ள, ஒரு சமூக தகவல் பரிமாற்றம் தொடர்பான தளம்.

நீங்கள் ஒரு புகைப்படம் எடுப்பவர் என்றால், உங்கள் படங்களை உலகத்திற்கு காட்டி, பலரின் அன்பையும் பாராட்டையும் பெறலாம்.

ஆனால் இந்த தளத்தில் இலவசமாக மாதம் 100 MB அளவிலான படங்கள்தான் சேமிக்கமுடியும். அதிகம் சேமிக்க மற்றும் பல வசதிகளுக்கு பிரிமியம் கணக்கு இருக்கவேண்டும். ஒரு வருடத்திற்கு 1000 ரூபாய் வரை செலவாகும். என்னைக்கேட்டால் இது மிகவும் அதிகமில்லை. ஏனென்றால், நீங்கள் கணக்கற்ற அளவில் போட்டோ மற்றும் வீடியோக்களை சேமித்து வைத்துகொள்ள முடியும். உலகத்தில் உள்ள அனைவர்க்கும் தனித்தனியாக அனுப்பி காட்டவேண்டியது அவசியமில்லை. உங்கள் சேமிப்பு தொடரை மட்டும் மின்னஞ்சல் செய்தால் போதும். அனைவரும், இந்த பிலிக்கர் தளத்தில் இருந்து, பார்க்க முடியும். யார்யார் பார்க்கலாம், பார்க்கக்கூடாது என நீங்கள் வரையறுக்கப்பட்டவர்கள் மட்டும்தான் பார்க்கமுடியும். உங்கள் பிள்ளைகள் அயல்நாடுகளில் வசித்து வந்தால், அவர்கள் பார்க்கும்படி, இந்த தளத்தில் உங்கள் போட்டோவை மற்றும் வீடியோக்களை சேமித்து, நண்பர்கள், உறவினர்கள் என்று அனைவரிடமும் பகிர்ந்து கொள்ளலாம்.

இங்கு இடதுபுறம் பார்க்கும் படங்கள், நான் எனக்குப்பிடித்தவை என சிலவற்றை, ஒரு ஸ்லைட்ஷோ போல பொருத்தியுள்ளேன்.

இந்த தளத்திலிருந்து, நேரடியாக ஒரு போட்டோவை நம் வலைப்பதிவு தளத்திலும் பதித்துக்கொள்ள முடியும். (இந்த கட்டுரையில் நான் செய்துள்ளது போல.)

மைக்ரோசாப்ட் விண்டோஸ் லைவ் தளத்தில் உங்களுக்கு 25 GB இடம் இலவசமாக கொடுக்கப்படுகிறது. இதில், நீங்கள் எந்தவிதமான கோப்புகளையும் சேமித்து இது போல வலைப்பதிவு தளத்திலும், வேண்டியவர்களுடனும் பகிர்ந்துகொள்ள முடியும்.

விண்டோஸ் லைவ் பற்றி தனியாக ஒரு கட்டுரையில் பார்க்கலாம்.

நீங்கள் படித்துக்கொண்டு இருக்கும் பகுதி:- இலவச சேவைகள் (இந்த பகுப்பில் உள்ள மற்றைய கட்டுரைகளுக்கு கீழேயுள்ள தொடரை சொடக்குக)

  • Share/Bookmark

Post a Comment

Your email is never published nor shared. Required fields are marked *
*
*