Skip to content

இணையதளம் நிறுவ வேண்டிய மென்பொருள் வன்பொருள் என்னென்ன?

முந்திய கட்டுரைகளில், இணையதளம் அமைப்பது, ஒருங்குறியில் தளம் அமைப்பது, தளப்பெயர் பதிவு செய்வது, என பல விஷயங்களை பற்றி பார்த்தோம்.  இந்த கட்டுரையில் ஒரு இணையதளம் அமைக்க வேண்டிய மென்பொருள் மற்றும் வன்பொருள் என்னென்ன என தெரிந்துகொள்ளவோம். இந்த பகுதியில் உள்ள மற்ற கட்டுரைகளையும் படித்துவிட்டு அதன் தொடர்ச்சியாக இதை படிக்கவும்.

மூன்று விதத்தில் ஒரு தளம் அமைக்கலாம் என அறிந்துகொண்டோம் அல்லவா! அதில் முதலாவதாக “சொந்தமாக தளம் அமைப்பது” என்று சொல்லியிருந்தேன். அதைப்பற்றி இப்போது பார்ப்போம்.

சொந்தமாக ஒரு தளம் உருவாக்குவதற்கு எக்கச்சக்கமான செலவாகும் என்று கூறியிருந்தேன். ஏனென்றால் எல்லா உபகரணங்களையும், கணணி சாதனங்களையும், தொழில்நுட்ப நிபுணர்களின் சேவைகளுக்கு ஆகும் செலவையும், கூட்டிக்கழித்துப் பார்த்தால், நான் சொல்வது சரி என்று ஒத்துக்கொள்வீர்கள்.

வன்பொருள்:

  1. மோடம் – இணைய சேவை வழங்குவோர் இடத்திலிருந்து உங்கள் இடத்தை இணைக்க.
  2. மீடியா – வயர் அல்லது வயர்லெஸ் (இணைய சேவை வழங்குவோர் இடத்திலிருந்து உங்கள் இடத்தை இணைக்க).
  3. ரௌட்டர் – உங்கள் நெட்வொர்க்கையும் இணைய சேவை வழங்குவோர் நெட்வொர்க்கையும் இணைக்க.
  4. சர்வர் மற்றும் வேண்டிய அளவு கணணிகள் – சேவை வழங்க மற்றும் நிர்வகிக்க.
  5. ஹப் மற்றும் கேபிள்கள் – லோக்கல் ஏரியா நெட்வொர்க் அமைக்க.
  6. யுபிஎஸ் – தடையில்லாத மின்சார வசதிக்காக உங்கள் நெட்வொர்க் அளவிற்கு தகுந்தவாறு.
  7. தளப்பெயர் – உங்களுக்கு என ஒன்று அல்லது அதற்குமேலாக தேவைக்கேற்ப.
  8. 24 மணிநேர இணைய இணைப்பு மற்றும் ஐபி நம்பர்கள் – இணைய சேவை வழங்குவோரிடம் இருந்து பெறவேண்டும். அதிக பேண்ட்விட்த் என்றால் அதிக செலவாகும்.

என அனைத்தும் சேர்த்து லட்சக்கணக்கில் ஆகிவிடும்.

மென்பொருள்:

  1. சர்வர் ஆபெரேடிங் சிஸ்டம் – லினக்ஸ் என்றால் இலவசம், விண்டோஸ் என்றால் செலவாகும்
  2. வெப் சர்வர் – அப்பாச்சி அல்லது ஐஐஎஸ் (இரண்டுமே இலவசம் ஆனால், ஐஐஎஸ் விண்டோஸ் இயங்குதளத்துடன் வருவது)
  3. மெயில் சர்வர் – மின்னஞ்சல் சேவை வழங்க (பல இலவச மென்பொருட்கள் கிடைக்கும், உதாரணமாக ஸ்குரில் மெயில்)
  4. டேட்டாபேஸ் – மைஎஸ்க்யுஎல் என்றால் இலவசம், ஓரகில் என்றால் செலவாகும்
  5. ஸ்கிரிப்ட் என்ஜின் – ஏஎஸ்பி, பிஹெச்பி, ஜேஎஸ்பி, பேர்ல் என பல்வேறு மென்பொருட்கள் இலவசமாக கிடைக்கும்

உள்ளடக்கம் மற்றும் நிர்வாகம்:

இதுபோல, தேவையான அனைத்து மென்பொருள்களும் பொதுவாக இலவசமாகவே கிடைக்கக்கூடும்.எனவே மென்பொருள் செலவு மிகவும் குறைவுதான். ஆனாலும், இப்படியாக தேவையான எல்லா மென்பொருளையும் ஒருங்கிணைத்து வேலைசெய்ய வைப்பது, ஒன்றுடன் ஒன்று இடறாமல் பராமரிப்பது, மற்றும் அவ்வப்போது அப்டேட் செய்வது என்பது எளிதல்ல. இதற்கு தொழில்நுட்ப நிபுணர்களின் சேவையை நாடவேண்டும். அதற்குறிய செலவையும் கணக்கில் எடுத்துக்கொள்ள வேண்டும். இது ஒரு நிரந்தர செலவு.

திறமூல உரிமம் அடிப்படையில் வழங்கப்படும் பல இலவச மென்பொருள்கள் பற்றி தனியாக ஒரு தளம் உள்ளது.

இதுவரை கூறியது வெறும் இணையதளம் அமைப்பதற்கு மட்டும்தான். ஒரு இணையதளம் ஏதாவதொரு விஷயத்தை, பொருளை உள்ளடக்கியதாக இருக்கவேண்டும். ஒரு தளத்தின் அளவைப்பொருத்து, இந்த தள-உள்ளடக்கம் உருவாக்குவது, மாற்றி அமைப்பது, நிர்வகிப்பது என பல வேலைகளுக்கு நாம் தொழில்நுட்ப நிபுணர்களின் சேவையை நாடவேண்டிய அவசியமுள்ளது. இதுவும் ஒரு நிரந்தர செலவு.

பிளாஷ், பிக்சர் எடிட்டிங், டேட்டாபேஸ் மேநேஜ்மென்ட், ஸ்க்ரிப்டிங் என பல்வேறு துறைசார்ந்தோரை அணுகவேண்டும். எல்லாமே நம்மால் செய்யமுடியும் என்பது இயல்பில் முடியாத காரியம் என்பது உணரவேண்டிய ஒன்று. இவ்வளவும் ஒரு தனிநபர் செய்யும் வேலைகள் அல்ல. ஒரு நிறுவனம், பல பணியாளர்களை வைத்து வியாபார ரீதியாக நடத்தக்கூடிய ஒரு பிசினஸ். இப்படிப்பட்ட ஒரு நிறுவனம், கட்டணத்தொகை அடிப்படையில், ஹோஸ்டிங் சேவையை வழங்கி, தனிநபருக்கு, சிறுதொழில் புரிவோருக்கு உதவியாக இருக்கிறார்கள்.

எனவே, ஒரு நிறுவனம்தான் இதுபோன்ற முறையில், பல ஊழியர்களை வேலைக்கு அமர்த்தி சிறப்பாக ஒரு தளம் அமைத்துக்கொள்ள முடியும்.

நீங்கள் படித்துக்கொண்டு இருக்கும் பகுதி:- இணையம் ஒரு அறிமுகம் (இந்த பகுப்பில் உள்ள மற்றைய கட்டுரைகளுக்கு கீழேயுள்ள தொடரை சொடக்குக)

இந்த கட்டுரை உங்களுக்கு பயனுள்ளதாக இருந்ததா? இதுபோல வேறு எந்தவிதமான தலைப்பில் கட்டுரைகளை எதிர்பார்கிறீர்கள் என பின்னூட்டம் கொடுக்கவும்.

  • Share/Bookmark

Post a Comment

Your email is never published nor shared. Required fields are marked *
*
*