இணையதளத்தில் உலகமுழுவதிலும் உள்ள பல கணணிகள் இணைக்கப்பட்டுள்ளது. உண்மையில் இந்த கணணிகள் அனைத்தும் ஒரு எண்ணின் அடிப்படையில் தனித்தனியாக அறியப்படுகிறது. இந்த எண்ணை ஐபி நம்பர் என்று சொல்கிறோம். எப்படி தொலைபேசி எண்ணை கொண்டு, கண்ட்ரி கோட், எஸ்டிடி கோட் மூலமாக அந்த தொலைபேசி இயங்கும் இடத்தை துல்லியமாக அறிந்துகொள்ள முடியுமோ, அதேபோல் ஐபி எண்ணை கொண்டு, ஒரு கணணி இயங்கும் இடத்தை துல்லியமாக அறிந்துகொள்ள முடியும்.
இணைய இணைப்பு சேவை வழங்குபவர்கள் மூலம், நாம் வேண்டியபோது இணையத்தில் நம் கணணியை இணைத்துக்கொள்ளும் பொழுதிலும், நம் கணணிக்கு, தற்காலிகமாக ஒரு ஐபி எண் கொடுக்கப்படும். இதனால்தான், நாம் உலகமுழுவதிலும் உள்ள கணணியில் இருந்து பல சேவைகளை பெறமுடிகிறது மற்றும், நம் நண்பர்கள், உறவினர்கள் என அனைவரிடமும் தொடர்பு கொள்ளமுடிகிறது. இப்படியாக இணையத்தில் இணைக்கப்பட்ட பல கணணி சம்பந்தமான, நெட்வொர்க் சாதனங்கள் அனைத்தும் ஒன்றையொன்று இந்த ஐபிஎண் மூலமாகவே கண்டறிந்து, தகவல்களை பகிர்ந்து கொள்கின்றன.
ஆனால், நம்மால் இப்படி பல ஆயிரக்கணக்கான எண்களை நினைவில் நிறுத்திக்கொள்ள முடியாது என்பதனாலும், வெறும் எண்ணை கொண்டு, ஒரு தளத்தில் எந்தவிதமான உள்ளடக்கம் இருக்கும் என்றும் யூகிக்க முடியாது என்பதனால், மனிதர்களுக்காக இணைய சேவை வழங்கும் பல கணணிகளை, ஒரு பெயரால்தான் அறியப்படுகிறது. இதற்கு “டொமைன் நேம்” என்று பெயர். இதை நாம் தளப்பெயர் என கொள்வோம். உலகத்தில் உள்ள எந்த ஒரு தளப்பெயரும் பிரத்யேகமாக ஒருவருக்கு, ஒரு நிறுவனத்திற்கு, ஒரு அரசாங்க துறைக்கு, ஒரு அமைப்பிற்கு, என யாரவது ஒருவருக்கு பதிவுசெய்யப்படும்.
இந்த தளப்பெயரை பல பிரிவுகளில் பதிவு செய்யப்படுகிறது. இணையதளம் தொடங்கிய காலத்திலிருந்து, ஆறு முக்கிய பிரிவுகளில் அதாவது, டாட் காம், டாட் ஓஆர்ஜி, டாட் நெட், டாட் இடியு, டாட் ஜிஓவி, டாட் எம்ஐஎல் (.com, .org, .net, .edu, .gov, .mil – commercial, organisation, network, education, government, military) என்கிற “ஜெனிரிக் டாப் லெவல் டொமைன்” களில்தான் பதிவுசெய்யப்பட்டது. பின்னர் வந்த காலத்தில், தளப்பெயருடன் இரண்டு எழுத்து கண்ட்ரி கோட் சேர்க்கப்பட்டது. பின்னர் வந்த காலத்தில், டாட் நேம், டாட் இன்போ, என பல டொமைன் நேம் புழக்கத்தில் வந்தது.
இப்படியாக நாம் ஒரு தளப்பெயரை, இணைய உலாவியில் தட்டச்சிடும் பொழுது அல்லது ஒரு இணைய தொடரை சொடக்கும் பொழுது, “டொமைன் நேம் சிஸ்டம்” (டிஎன்எஸ்) என்ற வழங்கி-சேவை மூலம், அந்த தளப்பெயருக்கு உரிய ஐபி எண் கண்டுபிடிக்கப்பட்டு அந்த கணணியில் இருந்து தகவல்கள் நம் கணணியை வந்து சேர்க்கிறது. டிஎன்எஸ் உதவி இல்லாமல் நாம் இணையத்தில் உலவமுடியாது.
பொதுவாக இந்த தளப்பெயர் பதிவுசெய்வது என்பது, இணைய இணைப்பிலேயே செய்யவேண்டும். உங்களிடம் கடன் அட்டை அல்லது பற்று அட்டை இருக்கவேண்டும். இது ஒரு இரண்டு நிமிட வேலைதான். நீங்கள் தெரிவு செய்யும் தளப்பெயர், உங்கள் நிறுவனம், அமைப்பு, தள-உள்ளடக்கம், என்பதை விவரிக்கும் வகையில் இருக்கவேண்டும். (இது சட்டமில்லை ஆனால் இதுதான் நடைமுறை!)
உலகமுழுவதிலும் பல நிறுவனங்கள் டொமைன் ரிஜிஸ்ட்ரேஷன் சேவையை கட்டணத்திற்கு வழங்குகிறது. கூகுளில், “domain registration” என்று தேடிபார்க்கவும். உதாரணமாக இந்த தளத்தில் நீங்கள் ஒரு தளப்பெயரை பதிவு செய்துகொள்ள முடியும். பொதுவாக, இந்த டொமைன் ரிஜிஸ்ட்ரேஷன் சேவையை வழங்கும் தளத்தில் முதலில் உங்களுக்கு ஒரு கணக்கு பதிவு செய்துகொண்டு, பின்பு வெறுமனே ஒரு பெயரை தேர்வு செய்து, அந்த பெயரில் எந்த டொமைனில் கிடைக்கும் அல்லது ஏற்கனவே இந்த பெயரில் ஒரு டொமைன் நேம் பதிவு செய்யப்பட்டுள்ளதா எனவும் தெரிந்துகொள்ளலாம். பதிவு செய்யும் நிலையில் நீங்கள் தேர்வுசெய்த ஒரு பெயர் இருக்கும்போது, ஒன் டூ த்ரீ என ஸ்டேப்-ஸ்டெப்பாக வரும் படிவங்களை பூர்த்தி செய்து, அதை உங்களுடையதாக்கி கொள்ளலாம்.
ஆனால், வெறும் தளப்பெயரை மட்டும் பதிவு செய்தால் போதாது. ஹோஸ்டிங் சேவையையும் பதிவு செய்யவேண்டும். அப்போதுதான், தளம் அமைக்க முடியும். இதுபற்றி இணையதளம் அமைப்பது எப்படி என்ற கட்டுரையில் அதிக விபரம் உள்ளது. நம்முடைய தளப்பெயரையும், ஹோஸ்டிங் கணணியையும், தளப்பெயரை பதிவு செய்தவரே இணைக்க வேண்டும். இதற்கு அட்ரஸ் ரெக்கார்ட், நேம் சர்வர் ரெகார்ட் என ஐபி எண் விபரம், ஹோஸ்டிங் சேவையை வழங்குபவர் கொடுக்கவேண்டும். ஒரு தளப்பெயர் பதிவு செய்ததும் உடனடியாக அதை நாம் இணையதளத்தில் பார்க்க முடியாது. இதற்கு 48 மணிநேரத்தில் இருந்து 72 மணிநேரம் பிடிக்கலாம். தளப்பெயரையும் ஹோஸ்டிங் சர்வீஸும் ஒருவரிடமே வாங்கவேண்டும் என்றில்லை. உங்கள் தள ஆயுட்காலம் வரை, இந்த தளப்பெயரை (ஒரு வருடம், இரண்டு அல்லது ஐந்து, பத்து வருடம் என) புதுப்பித்துக்கொண்டே இருக்கவேண்டும். அதற்கும் கட்டணம் உண்டு. எனவே, ஒரு தளப்பெயரை பதிவு செய்து பராமரிப்பது நிரந்தர செலவு!
நீங்கள் படித்துக்கொண்டு இருக்கும் பகுதி:- இணையம் ஒரு அறிமுகம் (இந்த பகுப்பில் உள்ள மற்றைய கட்டுரைகளுக்கு கீழேயுள்ள தொடரை சொடக்குக)
- ஒருங்குறியில் தமிழ் இணையதளம் அமைப்பது எதற்காக?
- ஒரு இணையதளம் அமைப்பது எப்படி? - பகுதி 1
- ஒரு இணையதளம் அமைப்பது எப்படி? – பகுதி 2
- வலைப்பதிவு மற்றும் இணையதளம் - இவற்றில் உள்ள வித்தியாசம் என்ன?
- இணையதளம் அமைக்க என்னென்ன ஆற்றல்கள் வேண்டும்?
- சொந்த தளப்பெயர் பதிவு செய்வது எப்படி?
- இணையதளம் நிறுவ வேண்டிய மென்பொருள் வன்பொருள் என்னென்ன?
- தளநிர்வாகம் சுலபமாக செய்வது எப்படி?
- ஸ்டேடிக் மற்றும் டைனமிக் பக்கங்கள் என்றால் என்ன?
- லினிக்ஸ் சர்வர் அமைப்பது எப்படி? பகுதி 1
- லினிக்ஸ் சர்வர் அமைப்பது எப்படி? பகுதி 2
Post a Comment