This photo is send from my mobile phone to Flickr account. Testing how to send a photo to my Blog directly from mobile phone.
இந்த (என் வீட்டில் உள்ள தினசரி காலண்டர்) படம் என் கைத்தொலைபேசியிலிருந்து நேரடியாக என் வலைப்பதிவு தளத்திற்கு, யாஹூவின் பிலிக்கர் சேவைகள் மூலமாக, அனுப்பப்பட்டது. பிலிக்கர் உதவி பக்கத்தில் இது பற்றி விபரம் உள்ளது.
இதற்கு, உங்கள் கைத்தொலைபேசியில், ஜிபிஆர்எஸ் என்ற இணையதளத்தில் இணைத்துக்கொள்ளும் வசதி இருக்கவேண்டும். நீங்கள் தொலைதொடர்பு சேவையை பெறும் நிறுவனத்தில் இருந்து, உங்கள் தொலைபேசி எண்ணுக்கு ஜிபிஆர்எஸ் சேவையையும் பெற்றுக்கொள்ள வேண்டும். ப்ளிக்கெரில் ஒரு கணக்கும் இருக்கவேண்டும். (உங்கள் கைத்தொலைபேசியில் கேமராவும் இருக்கவேண்டும்!)
இப்படியாக உங்கள் கைத்தொலைபேசியில் இருந்து தள ஏற்றம் செய்தபின், அந்த கட்டுரையை உங்களுக்கு வேண்டிய மாதிரி உங்கள் வலைப்பதிவு தளத்திற்குச் சென்று திருத்திக் கொள்ளலாம். (இந்த கட்டுரையில் நான் செய்திருப்பது போல, ஆங்கிலத்தில் உள்ள வாசகம் என் போனில் இருந்து நேரடியாக டைப் செய்தது. மற்றதெல்லாம் இந்த தளத்தில் வந்து நான் மாற்றியது.)
நீங்கள் அதிகமாக பிரயாணம் செய்பவர், அல்லது ஒரு சமூக ஆர்வலர் என்றால், நீங்கள் பார்க்கும் ஒரு நிகழ்ச்சி, சம்பவம், சமூக அவலங்கள் அல்லது பிடித்தது என எதைவேண்டுமானாலும் படம்பிடித்து உடனுக்குடன் சுடச்சுட உங்கள் தளத்தில் ஏற்றி அனைவரும் காணும்படி செய்ய, இந்த சேவை மிகவும் உபயோகமுள்ளது.
நீங்கள் படித்துக்கொண்டு இருக்கும் பகுதி:- இலவச சேவைகள் (இந்த பகுப்பில் உள்ள மற்றைய கட்டுரைகளுக்கு கீழேயுள்ள தொடரை சொடக்குக)
- யாஹூவின் பிலிக்கர் சேவையை எப்படி உபயோகிக்கலாம்?
- கைபேசியில் இருந்து நேரடியாக ஒரு போட்டோவை என் தளத்தில் ஏற்றுவது எப்படி?
- விண்டோஸ் லைவ் சேவைகள் பற்றி விளக்கங்கள்
- கூகுளின் யூ ட்யூப் எதற்காக? எப்படி உபயோகிப்பது!

Post a Comment