Skip to content

கூகுளின் யூ ட்யூப் எதற்காக? எப்படி உபயோகிப்பது!

யூ ட்யூப் – உங்கள் வீடியோக்களை உலகத்தில் உள்ள அனைவரிடமும் பகிர்ந்து கொள்ள கூகுளின் ஒரு இலவச சேவை. இதுபற்றிய அதிக விவரங்களை இந்த கட்டுரையில் பார்க்கலாம்.

உங்களிடம் கூகிள் கணக்கு இருந்தால் போதும். இல்லையென்றால் இலவசமாக உருவாக்கி கொள்ளலாம். இந்த சேவையை உபயோகித்து 10 நிமிட நேர, 2 GB அளவிலான ஒரு வீடியோ கோப்பை உங்கள் கணணியில் இருந்து நேரடியாக யூட்யூப் தளத்திற்கு ஏற்றிக்கொள்ளலாம். மேலும், மின்னஞ்சல் அல்லது கைத்தொலைபேசி மூலமாகவும் ஏற்றிக்கொள்ளலாம்.

நீங்கள் அனுப்பும் வீடியோ கோப்பை உலகிலுள்ள அனைவருடனும் பகிர்ந்து கொள்ளலாமா அல்லது குறிப்பிட்ட நண்பர்கள் மற்றும் உறவினர்களுடன் மட்டும் பகிர்ந்து கொள்ளவேண்டுமா என்றும் உங்களால் தீர்மானிக்க முடியும்.

உங்கள் கணணியில் வெப் கேமரா இருந்தால், இதை உபயோகித்து எடுக்கப்பட்ட வீடியோ, கைத்தொலைபேசியில் எடுக்கப்பட்ட வீடியோ, கேம்கோடர் மூலமாக எடுக்கப்பட்ட வீடியோ என எந்த வகையிலான வீடியோக்கள் ஆனாலும் யூட்யூப் தளத்தில் ஏற்றிக்கொள்ள முடியும்.

இப்படியாக நீங்கள் தள ஏற்றம் செய்த வீடியோவை, உங்கள் தளத்தில் அல்லது மற்ற யாருடைய தளத்திலும் எம்பெட் செய்துகொள்ள முடியும். இத்தளத்தில், நான் கைத்தொலைபேசியிலிருந்து நேரடியாக என் யூட்யூப் கணக்கில் தள ஏற்றம் செய்த வீடியோவை எம்பெட் செய்துள்ளேன். இது நான் குடியிருக்கும் அடுக்குமாடி கட்டிடத்தில் இருந்து எடுக்கப்பட்ட ஒரு சாம்பிள்தான்.

இந்த சேவையை நல்ல செயலுக்கு பயன்படுத்தவும். நீங்கள் தள ஏற்றம் செய்யும் வீடியோ கோப்பு உங்களுடையதாக இருக்கவேண்டும். யாருடைய காப்புரிமையையும் மீறாது, வேண்டாத வம்பில் சிக்கிக்கொள்ளும் வேலைகளை செய்யாதீர்கள்!

உங்கள் வீடியோவை எத்தனை முறை பார்க்கப்பட்டது, யார்யார் உங்கள் வீடியோவில் விருப்பம் கொண்டு உங்களின் மற்றைய வீடியோக்களுக்கு ஆவலுடன் சந்தாதாரர் ஆகியுள்ளார், மற்றும் உங்கள் வீடியோ எந்த பகுதியில் பிரிக்கப்பட வேண்டும், மேலும் உங்கள் வீடியோவின் பல அம்சங்களை திருத்தி அமைப்பது என பல்வேறு அம்சங்கள் யூட்யூபில் உள்ளது.

யூட்யூப் பற்றி மேலும் பல்வேறு விஷயங்களை அதன் உதவி பக்கத்தில் தெரிந்துகொள்ளலாம்.

நீங்கள் படித்துக்கொண்டு இருக்கும் பகுதி:- இலவச சேவைகள் (இந்த பகுப்பில் உள்ள மற்றைய கட்டுரைகளுக்கு கீழேயுள்ள தொடரை சொடக்குக)

  • Share/Bookmark

Post a Comment

Your email is never published nor shared. Required fields are marked *
*
*