விண்டோஸ் லைவ் என்பது, மைக்ரோசாப்ட் நிறுவனத்தின் ஒரு இலவச மென்பொருட்களின் ஒருங்கிணைந்த தொகுப்புகளின் “முத்திரை பெயர்”. அதாவது, ஒரு விண்டோஸ் லைவ் கணக்கை கொண்டே, பல்வேறு சேவை தளங்களில் நாம் சேவைகளை பெறமுடியும். ஒவ்வொரு தளத்திலும் ஒரு கணக்கு வேண்டும் என்று அவசியமில்லை.
கூகிள், யாஹூ மற்றும் மைக்ரோசாப்ட் நிறுவனங்கள் ஒன்றுடன் ஒன்று போட்டி போட்டுக்கொண்டு இதுபோன்ற சேவைகளை இலவசமாக வழங்கி வருகின்றன. நமக்கு கொண்டாட்டம்தான். மேலும் பல கட்டுரைகளில், ஒவ்வொரு நிறுவனத்தின் சேவையை பற்றி ஒவ்வொன்றாக பார்க்கலாம். இது ஒரு அறிமுக கட்டுரை. முக்கியமான சில சேவைகள் பற்றி தனித்தனியாக வெவ்வேறு கட்டுரைகளில் பார்க்கலாம்.
இந்த சேவைகள் அனைத்தும், இணைய இணைப்பிலேயே இயங்கக்கூடிய சேவைகளாக இருப்பதால், உலகின் எந்த இடத்திலிருந்தும், இதை அணுகவும், பெறவும் முடியும்.
விண்டோஸ் லைவ் சேவைகளின் விபரங்கள்
| சேவை பெயர் | தள முகவரி | விளக்கம் |
| விண்டோஸ் லைவ் அக்கவுண்ட் | விண்டோஸ் லைவ் கணக்கு | உங்கள் கணக்கு பற்றிய விபரங்கள் மற்றும் பல்வேறு விருப்பங்களை பொருத்திக்கொள்ள உதவும் தளம். |
| விண்டோஸ் லைவ் அட்மின் சென்ட்டர் | விண்டோஸ் லைவ் நிர்வாக நிலையம் | உங்கள் சொந்த இணையதளத்தில், மைக்ரோசாப்ட்டின் ஹாட்மெயில் மின்னஞ்சல் சேவையை நிறுவிக்கொள்ளலாம். |
| விண்டோஸ் லைவ் அலெர்ட்ஸ் | விண்டோஸ் லைவ் விழிப்புணர்வு செய்திகள் | பலதரப்பட்ட விழிப்புணர்வு செய்திகளை உடனுக்குடன் உங்கள் மின்னஞ்சல் வழியாக, மெசன்ஜர் வழியாக அல்லது எஸ்எம்எஸ் மூலமாக பெறுவதற்கான ஒரு சேவை. |
| விண்டோஸ் லைவ் காலெண்டர் | விண்டோஸ் லைவ் காலெண்டர் | உங்களின் எல்லாவிதமான அன்றாட நிகழ்ச்சிகளின் அல்லது வேலைகளின் கால அட்டவணையை தொகுக்க, மற்றும் வேண்டியவருடன் பகிர்ந்து கொள்ள மேலும் இது பற்றி உங்களுக்கு ஞாபகப்படுத்த உதவும் ஒரு சேவை. |
| விண்டோஸ் லைவ் எசென்ஷியல் | விண்டோஸ் லைவ் எசென்ஷியல் | விண்டோஸ் லைவ் சம்பந்தமான எல்லாவிதமான மென்பொருட்களையும் ஒரே இடத்திலிருந்தே தளவிறக்கம் செய்து வேண்டியது போல உங்கள் கணணியில் பொருத்திக்கொள்ள உதவும் ஒரு சேவை. |
| விண்டோஸ் லைவ் காலரி | விண்டோஸ் லைவ் காலரி | விண்டோஸ் லைவ் சம்பந்தமான மென்பொருட்களை மேலும் மேம்படுத்த வேண்டி நீட்சிகளை பொருத்திக்கொள்ள உதவும், நீட்சிகளின் தொகுப்புகள் நிறைந்த தளம். |
| விண்டோஸ் லைவ் ஹாட்மெயில் | விண்டோஸ் லைவ் ஹாட்மெயில் | விண்டோஸ் ஹாட்மெயில் சேவை தளம். |
| விண்டோஸ் லைவ் மெசன்ஜர் | விண்டோஸ் லைவ் மெசன்ஜர் | விண்டோஸ் லைவ் மெசன்ஜர் சேவை தளம். |
| விண்டோஸ் லைவ் போட்டோஸ் | விண்டோஸ் லைவ் போட்டோஸ் | உங்கள் கணணியில் உள்ள போட்டோவை நேரடியாக விண்டோஸ் லைவ் ஸ்பேஸ் தளத்தில் ஏற்றிக்கொண்டு மற்றவருடன் பகிர்ந்து கொள்ள, உதவும் சேவை. |
| விண்டோஸ் லைவ் ஸ்கைடிரைவ் | விண்டோஸ் லைவ் ஸ்கைடிரைவ் | உங்களின் எல்லாவிதமான கோப்புகளை இலவசமாக இணையதளத்தில் சேமித்து வைத்துக்கொள்ள, பகிர்ந்து கொள்ள மைக்ரோசாப்ட் 25 GB இடம் கொடுக்கிறது. |
| விண்டோஸ் லைவ் ஸ்பேசஸ் | விண்டோஸ் லைவ் ஸ்பேசஸ் | இலவச வலைபதிவு தளம். |
| விண்டோஸ் லைவ் டூல்பார் | விண்டோஸ் லைவ் டூல்பார் | எல்லாவிதமான விண்டோஸ் லைவ் சேவைகளை ஒரே இடத்தில் இருந்து பெறும்படி விண்டோஸ் இன்டர்நெட் எக்ஸ்ப்ளோரர் உலாவியில் பொருத்திக்கொள்ள ஒரு நீட்சி. |
| விண்டோஸ் லைவ் விடியோ மெசேஜ் | விண்டோஸ் லைவ் விடியோ மெசேஜ் | எழுத்து மூல மின்னஞ்சல், ஒலி மின்னஞ்சல் போய், இப்போது வீடியோ மின்னஞ்சல் வந்துவிட்டது. |
| விண்டோஸ் லைவ் சிங்க் | விண்டோஸ் லைவ் சிங்க் | பல கணணியில் உங்கள் கோப்புகளை ஒருப்போல அமைத்துக்கொள்ளும் (சின்க்ரோனைஸ்) சேவை. |
| விண்டோஸ் லைவ் ரைட்டர் | விண்டோஸ் லைவ் ரைட்டர் | கணணியிலேயே ஒரு கட்டுரையை தயார் செய்து, நேரடியாக உங்கள் வலைப்பதிவு தளத்தில் பதிப்பிக்க உதவும் ஒரு இலவச மென்பொருள். இதை தளவிறக்கம் செய்து உங்கள் கணணியில் பொருத்திக்கொள்ள வேண்டும். இந்த கட்டுரை “விண்டோஸ் லைவ் ரைட்டர்” மென்பொருள் உதவியுடன் பதிப்பிக்கப்பட்டது. |
இதைத்தவிர ஆபீஸ் லைவ் என்ற தளத்தில் உங்களின் எம்எஸ் ஆபீஸ் டாகுமெண்ட்களை சேமித்து, பார்க்க அல்லது பகிர்ந்து கொள்ளவும் ஒரு சேவை உள்ளது. 5 GB டிஸ்க் ஸ்பேஸ் இடமும் வழங்கபடுகிறது. நீங்கள் இந்த சேவை மூலம், இணையதளத்திலேயே உங்கள் வேர்ட், எக்ஸல் மற்றும் பவர்பாயிண்ட் கோப்புகளை பார்க்கலாம். ஆனால் எடிட் செய்ய முடியாது. இருந்ததாலும், உங்கள் கணணியில் எம்எஸ் ஆபீஸ் பொருத்தப்பட்டு இருந்தால், இந்த தளத்தில் ஒரு கோப்பை திருத்த வேண்டி சொடுக்கினால், நேரடியாக உங்கள் கணணியில் அந்த கோப்பு தள இறக்கப்பட்டு திருத்தும் வசதி உள்ளது.
நீங்கள் படித்துக்கொண்டு இருக்கும் பகுதி:- இலவச சேவைகள் (இந்த பகுப்பில் உள்ள மற்றைய கட்டுரைகளுக்கு கீழேயுள்ள தொடரை சொடக்குக)
- யாஹூவின் பிலிக்கர் சேவையை எப்படி உபயோகிக்கலாம்?
- கைபேசியில் இருந்து நேரடியாக ஒரு போட்டோவை என் தளத்தில் ஏற்றுவது எப்படி?
- விண்டோஸ் லைவ் சேவைகள் பற்றி விளக்கங்கள்
- கூகுளின் யூ ட்யூப் எதற்காக? எப்படி உபயோகிப்பது!
Post a Comment