லினிக்ஸ் எதற்காக பயன்படும்?
லினிக்ஸ் இயங்குதளம் முதன்முதலாக, சர்வர் முறையில் உபயோகத்தில் இருந்தது. தற்போது இது டெஸ்க்டாப் கம்ப்யுடேர்களிலும் பலராலும் உபயோகப்படுத்தும் ஒரு இயங்குதளமாக இருக்கிறது. ஆனால், கொஞ்சம் விவரம் தெரிந்தவர்களே இதை டெஸ்க்டாப் கம்ப்யூட்டரில் உபயோகிப்பது என்பது வழக்கத்தில் உள்ளது. ஏனென்றால், இந்த இயங்குதளத்தில் வேலை செய்யும் பலவிதமான மென்பொருட்களும் பரவலாக தனிமுயற்சியில் ஒருவரால், ஒரு வளரும் நிறுவனத்தால்,ஒருசிலரின் கூட்டு முயற்ச்சியில்தான் அடிப்படையில் வெளியிடப்படுகிறது. இதனால், இதுபோன்ற மென்பொருட்களை இன்ஸ்டால் செய்யும்போது வரும் பிரச்சினைகளையும் நீங்கள் எதிர்கொள்ள வேண்டியிருக்கும். அடிக்கடி புதுப்புது வெளியீடுகளை தயாரிப்பாளர்கள் ரீலிஸ் செய்கிறார்களா, ஏற்கனவே பலராலும் தளவிறக்கம் செய்யப்பட்டுள்ளதா, இந்த மென்பொருள் தளத்தில் கருத்து பரிமாற்றம் வசதி இருக்கிறதா என்றெல்லாம் சோதித்து உங்களுக்கு வேண்டிய மென்பொருட்களை இன்ஸ்டால் செய்யுங்கள்.
சர்வர் என்றால், சர்விஸ் கொடுப்பவர் என்று அர்த்தம். என்ன சர்விஸ்? யார் கொடுப்பவர்? என்று பார்த்தால், எல்லாமே மென்பொருட்கள்தான். ஒரு சேவை, பலராலும் வேண்டப்பட்ட ஒன்று என்றால், அதை ஒரு சென்ட்ரல் இடத்தில் நிறுவி, எல்லோரும் அங்கு வந்து அதைப்பெறும்படி செய்வதே சிறந்தது அல்லவா? உதாரணத்திற்கு, வங்கி சேவையை எடுத்துக்கொண்டால், அது ஒரு இடத்தில் இருக்கிறது. நாம் எல்லோரும் அங்கு சென்று நமக்கு வேண்டிய சேவைகளை பெறுகிறோம். கணணியில் ஒரு சேவையை வழங்கும்போது, அதை ஒரு சென்ட்ரல் கம்ப்யூட்டரில் நிறுவி, எல்லோரும் அந்த கம்ப்யூட்டரில் இருந்து, பெறும்படி செய்வதற்கு சர்வர் என்று சொல்வார்கள். இதுபோன்ற சர்வீஸ்களை வழங்கும் கம்ப்யூட்டர்கள் சர்வர் என்று அழைக்கபடுகின்றன. ஒரு சேவையை வழங்கும் மென்பொருளையும் சர்வர் என்று அழைப்பதும் வழக்கத்தில் உள்ளது. உதாரணமாக, வெப்சர்வர், எப்டிபிசர்வர், இமெயில்சர்வர் என்று பல சர்வர் மென்பொருட்கள் உள்ளன.
இதுபோன்ற பல சர்வர்களை கொண்ட ஒரு பெரிய உலகளாவிய கம்ப்யூட்டர் நெட்வொர்க் இன்டர்நெட் என்று அழைக்கபடுகிறது. இப்படி சர்வீஸ்களை வழங்குவதில் என்ன ஆதாயம் என்றால், உலகளவில் நாம் சர்வீஸ்களை வழங்கமுடியும் மற்றும் தொழில் முதலீட்டையும் குறைக்கமுடியும். சென்ட்ரலாக மெயின்டெயிநென்ஸ் செய்வது சுலபம். புது சர்வீஸ்களை வழங்குவதும், விரைவில் பழுதுபார்த்து தடங்கலை தவிர்த்து, மீண்டும் அந்த சர்வீஸை இயக்கத்திற்கு கொண்டுவருவது எளிது, என பல காரணங்கள் சொல்லலாம்.
பலரும் அறிந்த சேவைகள்
1. வெப் சர்வர் – இது இணையதளம் அமைத்து வழங்க உதவும் ஒரு சேவை. இது ஒரு மென்பொருள். திறமூல உரிமத்தின் அடிப்படையில் வெளியிடப்படும் அப்பாச்சி உலகளவில் பிரசித்தம்.இந்த வெப்சர்வர் எல்லாவிதமான இயங்குதளத்தில் வேலை செய்யும் பெருமை வாய்ந்தது. இதேபோல், மைக்ரோசாப்ட் விண்டோஸ் இயங்குதளத்தின் வெப்சர்வர் ஐஐஎஸ் என்பது.
2. எப்டிபி சர்வர் – இது உங்கள் கணணியில் இருந்துகொண்டே, உலகின் மற்றோரு மூலையில் இருக்கும் ஒரு கணணியில், கோப்பு, அடைவு இவற்றை உருவாக்க, மாற்றி அமைக்க, பெயர் மாற்றம் செய்ய என, ஃபயில் மேனேஜ்மெண்டை செய்வதற்கு உபயோகிக்கும் ஒரு சர்வீஸ்.
3. மெயில் சர்வர் – இது உலகளவில் மின்னஞ்சல் பரிமாற்றம் செய்துகொள்ள உதவும் ஒரு சேவை.
4. டிஎன்எஸ் சர்வர் – இது ஒரு கம்ப்யூட்டர் நெட்வொர்க்கில் உள்ள கணணிகளை தம்தம் பெயர் கொண்டு அறிவதற்கு மற்றும் அணுகுவதற்கு உதவும் ஒரு சேவை. உண்மையில், ஒரு கம்ப்யூட்டர் நெட்வொர்க்கில் உள்ள எல்லா கணனிக்கும் தனிப்பட்ட ஒரு எண் இருக்கும். நாம் எல்லா கணணியையும் எண்களை கொண்டு அணுகுவது சிரமம் என்பதால், பொதுச்சேவை வழங்கும் கணணிக்கு, ஒரு பெயர் சூடப்படுவது வழக்கம். எல்லோரும் இந்த பெயரால், அந்த கணணியை அணுகுவது எளிது. ஏனென்றால், நமக்கு ஒரு பெயரை ஞாபகம் வைத்துக்கொள்வது மிகவும் சுலபம். இந்த பெயரை டொமைன் நேம் என்பர்.
5. ஃபயர்வால் சர்வர் – இது நமது நெட்வொர்க்கை பாதுகாக்க உபயோகிக்கும் ஒரு சர்வீஸ். நம் நெட்வொர்க்கில் இருந்து வெளி நெட்வொர்க்கை அனுகும்போதும், வெளி நெட்வொர்க்கில் இருந்து நம் நெட்வொர்க்கை அனுகும்போதும் என்னென்ன சட்டங்களை கையாளவேண்டும் என்று தீர்மானித்து அதற்கு தகுந்தாற்போல் தகவல் பரிமாற்றம் செய்ய வழிவகுக்கும் ஒரு சேவை. சுலபமாக சொன்னால், யார் என்ன செய்யலாம், செய்யக்கூடாது என்று கண்காணிக்கும் ஒரு விசுவாசி. நாம் வகுக்கும் சட்டதிட்டங்களுக்கு கட்டுப்பட்டு வேலை செய்யும்.
6. ப்ராக்ஸி சர்வர் – இது ஒருவருக்காக மற்றொருவர் போல, உருமாறி வேலை செய்யும் ஒரு சேவை. பொதுவாக, ஒரு பெரிய நிர்வாகத்தின், கம்ப்யூட்டர் நெட்வொர்க்கில் இருக்கும் அனைத்து கணணிகளும் இண்டர்நெட்டில் நேரடியாக இணைக்கப்பட்டு இருக்காது. இவ்வாறான சூழ்நிலையில், அந்த நிறுவனத்தின் நெட்வொர்க்கில் ஒரு கணணியில், இந்த சர்வீஸை நிறுவி, எல்லா கணணிகளும் இண்டர்நெட் சேவையை பெற வழிசெய்ய இந்த சர்வீஸ் உதவும். அதேபோல, இண்டர்நெட்டில் இருந்து, நம் நெட்வொர்க்கை அணுகவும் இந்த சேவை வழிசெய்யும்.
7. டிஹெச்ஸிபி சர்வர் – இது ஒரு கம்ப்யூட்டர் நெட்வொர்க்கில் உள்ள கணணிகளுக்கு, பிரத்யேகமாக ஒரு எண் குறியீடு வழங்க உதவும் ஒரு சேவை. அதிகமான கணணிகளைக்கொண்ட ஒரு நெட்வொர்க்கில், நாமாகவே தனித்தனியாக குறியீடு எண் வழங்கி நிறுவகிப்பது என்பது சிரமம். இந்த சேவை, அந்த எண் குறியீடு வேலையை எளிதாக்கும்.
8. ஸ்ட்ரீம் சர்வர் – இது ஆடியோ, வீடியோ (ஒலிநாடா மற்றும் அசையும் படம்) இவற்றை நம் தளத்தில் இருந்து அனைவரும் பெற வழிசெய்ய உதவும் ஒரு சேவை. சம்பந்தமான ஆடியோ, வீடியோ கோப்புகளை தளவிறக்கம் செய்யாமலே, நேரடியாக உங்கள் கணணியில் கேட்க, பார்க்க இந்த சேவை உதவுகிறது.
இந்த சேவைகள் அனைத்தையும் எங்கள் நிறுவனத்தின் சர்வரில் பொருத்தி, எங்கள் தேவைக்கேற்ப வெற்றிகரமாக நடத்திக்கொண்டு இருக்கிறேன். எங்கள் அலுவலுகம் சுமார் 200 கம்ப்யூட்டர்கள் கொண்ட ஒரு நெட்வொர்க். எனவே அனைத்து சர்வீஸ்களையும் ஒரே சர்வரில் பொறுத்தி நிருவகித்து வருகிறேன்.
இந்த சேவைகள் அனைத்தும் பற்றி தனித்தனியாக நேரம் கிடைக்கும்போது எழுதுகிறேன்.
நீங்கள் படித்துக்கொண்டு இருக்கும் பகுதி:- இணையம் ஒரு அறிமுகம் (இந்த பகுப்பில் உள்ள மற்றைய கட்டுரைகளுக்கு கீழேயுள்ள தொடரை சொடக்குக)
- ஒருங்குறியில் தமிழ் இணையதளம் அமைப்பது எதற்காக?
- ஒரு இணையதளம் அமைப்பது எப்படி? - பகுதி 1
- ஒரு இணையதளம் அமைப்பது எப்படி? – பகுதி 2
- வலைப்பதிவு மற்றும் இணையதளம் - இவற்றில் உள்ள வித்தியாசம் என்ன?
- இணையதளம் அமைக்க என்னென்ன ஆற்றல்கள் வேண்டும்?
- சொந்த தளப்பெயர் பதிவு செய்வது எப்படி?
- இணையதளம் நிறுவ வேண்டிய மென்பொருள் வன்பொருள் என்னென்ன?
- தளநிர்வாகம் சுலபமாக செய்வது எப்படி?
- ஸ்டேடிக் மற்றும் டைனமிக் பக்கங்கள் என்றால் என்ன?
- லினிக்ஸ் சர்வர் அமைப்பது எப்படி? பகுதி 1
- லினிக்ஸ் சர்வர் அமைப்பது எப்படி? பகுதி 2
Post a Comment